கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், எனினும் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சம அணுகல் என்பது ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும். இவற்றை இலங்கையும் ஏற்றுள்ளது என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.