கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு 11 வகை நிறங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்

Date:

இன்று கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார்.

மேலும், 11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் இன்று சிலநேரம் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் நாளை முதல் அது தவிர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனமொன்றை பல சோதனைச் சாவடிகளில் நிறுத்த வேண்டிய நிலையை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு வீதி, கண்டி வீதி, கொலன்னாவையில் இருந்து தெமட்டகொடை நோக்கிய வீதி, பத்தரமுல்லையில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிய வீதி, ஹைலெவல் பாதையின் பிலியந்தலை நோக்கிய வீதி, காலி வீதி ஆகியவற்றில் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார துறையை சார்ந்தவர்களின் வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான ஸ்டிக்கர் ஒட்டப்படும். முப்படையினர் மற்றும் பொலிஸாரின் வாகனங்களுக்கு இலகு நீல நிற ஸ்டிகர் ஒட்டப்படும்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...