கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Date:

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இதுவரை 286பில்லியன் ரூபாசெலவிடப்பட்டுள்ளதாகஅமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

5000 ரூபா இடர்கால கொடுப்பனவுக்காக 80 பில்லியன் ரூபாவும், புத்தாண்டு காலப்பகுதியில் 15 பில்லியன் ரூபாவும், தற்போது 35 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், நிவாரணப் கொடுப்பனவு உரியவாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் நாட்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...