ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் முன்னால் ரணிலுக்கு ஆதரவாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் ஊடகத்தின் கட்டடத்திற்கு முன்னாலேயே இந் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த நிறுவனத்தின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவது வழமை.
அந்த இடத்திலேயே குறித்த ஊடக நிறுவனத்தின் பெயருடன் ரணிலின் ஒளிப்படம் தாங்கியவாறு “im back” என்ற வாசகம் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது சமூக வலைத்தளங்களில் பரவலகப் பகிரப்பட்டு வருகினறமையும் குறிப்பிடத்தக்கது.