மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும்கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்கப் போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்பு கேள்விக்கு உட்பட்டிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொலைக்குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை அளித்ததை அடுத்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள மரணதண்டனை கைதிகள் தமக்கும் விடுதலை வேண்டும் அல்லது தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.