16 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 சிறை கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விடுவிக்கப்பட்டுள்ள 93 கைதிகளில் 16 பேர் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆவர், ஏனைய 77 பேர் சிறு குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.