தனியார் சட்ட திருத்தம் | புதிய குழுவின் அறிக்கை பூர்த்தி 

Date:

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்
தொடர்பான பிரச்சிைனகைள சிபாரிசு செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட துறைசார்
புத்திஜீவிகள் குழு  தனது  அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது.

நீதியமைச்சர்  அலிசப்ரி, வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் குறிப்பிட்ட குழுவினை  நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் குழுவில் ஒன்பது பேர்
அங்கம் வகிக்கின்றனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில்மேற்கொள்ள வேண்டிய தித்தங்கள் தொடர்பாக அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமாசபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. உட்பட பல அமைப்புக்கள்  சிபாரிசுகளை அனுப்பி வைத்திருந்ததாகவும் அவை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும்  அடுத்த வாரம் இந்த குழு தனது சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை
நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளதாகம் வக்பு சபையின்  தலைவர்  சப்ரி
ஹலீம்தீன்  தெரிவித்தார்.

அத்தோடு ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அப்போதைய  நீதியைமச்சர் மிலிந்த மொரகொட வினால் நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே கையளித்துள்ள அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் வக்பு சபையின்  தலைவர்  சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

விடிவெள்ளி

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...