தமிழ்நாட்டுத் தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்!

Date:

தொகுப்பு: என்.எம் அமீன்

                   (சிரேஷ்ட ஊடகவியலாளர்)

 

நடந்து முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் இந்தியாவின் ஆளும் கட்சி ஆதரவு அணிகளைத் தோற்கடித்து தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலினும் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களது வகிபாகத்தை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

தமிழ்நாட்டில் சுமார் ஏழரை கோடி மக்கள் வாழ்கிறார்கள்.அதில் சுமார் 45 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.முஸ்லிம்களின் விகிதாசாரம் தமிழ் நாட்டில் 5.9 சதவீதம் ஆகும்.தமிழ்நாட்டில் திமுக,அதிமுக தினகரணின் அம்முக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்தனியாகவும் கூட்டணி அமைத்தும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன.மொத்தம் 5 முனை போட்டி இதில் பல முஸ்லிம்கள் போட்டியிட்டனர்.பிரதானமான போட்டி திமுக , அதிமுக இடையில்தான்.மற்ற மூன்றும் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெறவில்லை.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முஸ்லிம்கள் பெரும்பாலும் வாக்களித்துள்ளனர்.இது தவிர எஸ்டிபிஐ,உவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி இடம்பெற்றிருந்த அம்முக மற்றும் நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு ஓரளவு முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்ற காரணத்தால் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதற்கு வாக்களிக்கவில்லை.திமுக சார்பில் மூன்று முஸ்லிம்களும் மனிதநேய கட்சி சார்பில் இரு முஸ்லிம்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூவரும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஒருவரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிட்டனர்.இவர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட மூவர் தவிர ஏனைய ஏழு பேரும் வெற்றி பெற்றனர்.இவர்களில் திமுக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் ,ஆவடி நாசர் ஆகியோர் ஸ்டாலினின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டனர்.திமுகவின் நீண்டகால ஆதரவுக் கட்சியாக செயற்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,இம் முறை ஒரு தொகுதியிலேனும் வெற்றி பெறாமை அக்கட்சி எதிர்நோக்கிய பின்னடைவாகும்.தமது கட்சிக்கு ஏன் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை மீளாய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது.தெரிவு செய்த தொகுதிகளும் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களும் சாதகமாக இருக்கவில்லை. தமக்குச் சாதகமான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதற்கு கட்சி தவறிவிட்டது என்ற விமர்சனமும் எழுப்பப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி மஸ்தானின் பொறுப்பு சிறுபான்மை நலம் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலன் என்ற அமைச்சின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.மற்றொரு திமுக முக்கியஸ்தரான எஸ்.எம் நவாஸுக்கு பால்வளத் துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.திமுக சார்பில் பாலையங்கோட்டையில் அப்துல் வஹாப் தெரிவாகியுள்ளார்.இத் தேர்தலில் காங்கிரசிலிருந்து ஜே.எம்.ஹெச் ஹஸன் மெளலானா வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.இத் தேர்தலில் மனிதநேய கட்சி சார்பில் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ்வும் ப.அப்துல் ஸமதும் தெரிவாகியுள்ளனர்.இம்முறை நாகப்பட்டினம் தொகுதியில் இளம் அரசியல் செயற்பாட்டாளரும்.கலை இலக்கிய செயற்பாட்டாளருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆளுர் ஷா நவாஸ் வெற்றி பெற்றுள்ளார்.நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கூடுதலாக திமுக கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் முஸ்லிம்கள் திமுகவுக்கு 69.2 சதவீதம் வாக்களித்துள்ளனர்.ஆளும் கட்சியாக இருந்த ஏ.டி.எம் கேயிற்கு 24.18சதவீதமே வாக்களித்துள்ளனர்.

முஸ்லிம்களைப் போன்று தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களும் திமுக கூட்டணிக்கே கூடுதலாக வாக்களித்துள்ளனர்.திமுகவுக்கு 56.6 சதவீதமும் ஏ.டி.எம் கேயிற்கு 38.3 சதவீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் இத் தேர்தலில் ஏனைய கட்சிகளுக்கு அளித்த வாக்கு 7.3சதவீதம் என வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் 43பேர் கொண்ட அமைச்சரவையில் 5 முஸ்லிம்களுக்கு அமைச்சரவை அஸ்தஸ்துள்ள அமைப்புக்களும் இரு இணை அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்காளம் ஜமாஅதுல் உலமா ஹிந்தின் தலைவர் சித்திக்குல்லாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்தகாலங்களில் இனவாதம் தலைதூக்கி இருந்த இந்தியா புது வழியில் செல்வதற்கு தயாராகி வருகின்றது என்பதனையே மாநிலத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் தலைவர்கள் எடுத்துள்ள முற்போக்கான தீர்மானங்களும் சுட்டிக் காட்டுவதாக உள்ளன.

 

நன்றி: விடிவெள்ளி

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...