தலையில் காயம் ஏற்பட்டதால் நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்

Date:

தலையில் காயம்: நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் தனக்கு சிறிது நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக PSL எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19வது லீக் ஆட்டம் ஷேக் சயது மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவல் சல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டுப்ளசிஸ்.

இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற குவெட்டா கிளாடிடேட்டர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 7வது ஓவரில் பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஃபாப் டுப்ளசிஸ் பந்து எல்லைக்கோட்டை தொடாமல் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். பந்தை பிடிக்கும் முயற்சியின் போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இந்த மோதலில் டுப்ளசிஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது

சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டுப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் டுப்ளசிஸ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது/ ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” இவ்வாறு டுபிளசிஸ் தெரிவித்துள்ளார்.

டுபிளசிஸுக்கு நேர்ந்த இந்த எதிர்பாராதவிதமான நெருக்கடி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவர் நம்பிக்கையுடன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...