திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ என ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்ட வண்ணமிருந்தன. இதுகுறித்து கொழும்பில் உள்ள சீனதூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சீனப்பிரஜைகள் அணிந்திருந்த ஆடை இணையத்தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நபர்கள் சீனப்படைக்கு சொந்தமானவர்களா அல்லது பணியாளர்களா என்று தூதரகம் தனது பதிவில் தெரிவிக்கவில்லை.
Isn't the Verification and Fact-checking a MUST in the world of journalism? Clickbait or misinformation might only damage a media's credibility. https://t.co/w4SQ1TBdhm pic.twitter.com/hUpqMlqRQU
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 23, 2021