2016 ஆம் ஆண்டு முதல் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் உள்ளதாக த மேர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவின் விடுதலைக்கான சட்ட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
எனினும், விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் இடம்பெறவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர கொலையின் குற்றவாளியான துமிந்த சில்வா 2016 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.