வேகமாக பரவக்கூடிய இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் முதலில் இனங்காணப்பட்ட தெமடகொட பகுதியில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் எந்த வகையான கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுடைய பிசிஆர் மாதிரிகள் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெமடகொட, அராமயா வீதியை சேர்ந்த 129 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.