நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் நீர்கொழும்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்தது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 என்ற விமானத்தில் அவர்கள் மூவரும் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...