மே 2021 இன் தொடக்கத்தில், Muslim Aid நிறுவனம் கோவிட் -19 உடன் போராடி நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை சென்றடையும்படி அவசர நிவாரண பணிகளை தொடங்கியது.
திருகோணமலை மாவட்ட செயலாளர் – சமன் தர்ஷன பாண்டிகோரலவின் வேண்டுகோளுக்கு இணங்க, Muslim Aid நிறுவனம் இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. இந்நிகழ்வு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலக அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திருகோணமலையில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் செயலகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் Muslim Aid நிறுவனம் ரூபாய் 3000 மதிப்புள்ள 675 உலர் உணவு பொதிகளை, மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே.எஸ்.அருல் ராஜிடம் வழங்கிவைக்கப்பட்டது. இந்த பொதிகள் அனைத்தும் உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
Muslim Aid நிறுவனம் திருகோணமலை மாவட்டத்தில் 2021 ஜூன் முதல் வாரத்தில் 700 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்ததன் மூலம் அதன் அவசர நிவாரண முயற்சிகளைத் தொடர்ந்தது. இந்த விநியோகங்கள் தோப்பூர், அல்லைநகர், அல்லைநகர் கிழக்கு மற்றும் இக்பால் நகர் போன்ற பல கிராமங்களில் நடந்தன.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவேலி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 485 உலர் உணவுப் பொதிகளுடன் கோவிட் -19 நிவாரண முயற்சிகள் தொடர்ந்தன. உலர் உணவுப் பொதிகள் 4 கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
முஸ்லிம் எய்ட் அமைப்பு நிவாரணங்களை மாத்திரமன்றி அடிப்படை சுகாதார வசதிகளையும் மேம்படுத்த உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.