பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நாளை முதல் நடைமுறைக்கு வருவதால் பொசன் போயா தினத்தில் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
நாளைய தினம் வீடுகளில் தங்கி இருந்து மத வழிபாடுகளை அனுஷ்டிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வாடிக்கையாளர் இடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்ற பொது இடங்களில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக சிவில் உடையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)