“நிபுணர் குழுக்கள் கூறினால் மட்டுமே 14 ஆம் திகதி நாடு திறக்கப்படும்”

Date:

கோவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்,இரனுவா தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், நிபுணர் குழுக்களுடனான கலந்துரையாடலின் போது   கொவிட் தொற்று தீவிரத்திற்கு வழிவகுக்காது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாடு 14 ஆம் திகதி திறக்கப்படும் என்று கூறினார்.

நாட்டைத் திறப்பதற்கு முன்னர் கோவிட் பரவுவது குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டதாக ‘லங்கதீப’ தெரிவித்துள்ளது.

தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி தளர்த்தப்பட உள்ளன.

இதற்கிடையில், கோவிட் பரவுவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று பல மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய மாகாண பாடசாலைகள் நாளை மற்றும் திங்கட்கிழமைகளில் மூடப்படும்!

சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19)...

பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பங்கேற்பு.

பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய...

சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால், 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய்...

119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்

உண்மையான அவசரநிலைகளைப் புகாரளிக்க 119 அவசர தொலைபேசி சேவையை கண்டிப்பாகப் பயன்படுத்த...