பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜீ. எஸ். பி. ப்ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் இரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.