கொரோனா அச்சுறுத்தலுக்காக நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியர் சுசி பெரேரா இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை கொவிட் 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.