பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த பொதுமக்களின் ஆதரவு தேவை!

Date:

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாத்து கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினருக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 22,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...