பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை!

Date:

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்களாக 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை இன்று (03) சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன ​அடிப்படையில் 130 பேருக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வவுனியா, குருமன்காடு பகுதியில் பயணத்தடை நேரத்தில் வீதியால் பயணித்தோர், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில கிராமங்களைச் சேர்ந்தோர், வவுனியா நகரம் என எழுமாறாக 130 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இதன் முடிவுகளை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது...