பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 2 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிற பிரிவுகள் வழக்கம் போல் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.