பொதுப் போக்குவரத்து எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

நாட்டில் மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளனஇதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகளுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு காலையில் சென்றடையக்கூடிய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுவதற்கும், மாலையில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களுக்கு சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் இன்று முதல் 70 புகையிரத சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் புகையிரதங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை பேணும் வகையில் பயணிகளுக்கு உதவுவது இதன் நோக்கமாகும்.

இந்நிலையில், அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட ஆகிய இடங்களில் இருந்தும், கம்பஹாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் 11 புகையிரத சேலைகள் இன்று இடம்பெறும்.

கரையோர புகையிரத பாதையில் அலுத்கம, களுத்துறை தெற்கு, வாத்துவ, பாணந்துறை, மொரட்டுவ, கல்கிஸ்சை ஆகிய இடங்களிலிருந்து 12 ரயில் சேவைகள் இடம்பெறும்.

இதேபோன்று, அவிசாவளை- பாதுக்கைக்கும் இடையில் 5 புகையிரத சேவைகள் இடம்பெறும்.

புத்தளம் புகையிரத பாதையில் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்புக்கும் இடையில் 8 புகையிரத சேவைகள் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...