பொலிஸாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
28 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
Very earlier it was mentioned that the blocked assets worth was 700C ( 7000 millions )