போதிய வெளிச்சமின்மையால் இடை நிறுத்தப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி!

Date:

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, போதிய வெளிச்சமின்மையால் நேற்று இடையிடையே பாதிக்கப்பட்டது.

 

போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், அஜின்கிஹா ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.சீரற்ற வானிலையால் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...