மட்டக்களப்பில் 79,580 குடும்பங்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்கி வைப்பு!

Date:

நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பாதிப்புக்குள்ளான 79,580 குடும்பங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற சுமார் 78,584 குடும்பங்களுக்கும், முதியோர் கொடுப்பனவை பெற்று வருகின்ற 996 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 79,580 குடும்பங்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் குறித்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கொடுப்பனவானது பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலின் படி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...