மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிகட சிறைச்சாலையின் கூரையில் மேல் ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.