மல்வானையில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 83 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பியகம மற்றும் சியம்பலப்பே கிராம நிலதாரி பிரிவுகளில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறது.