வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சிறைச்சாலை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கைதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை தொடர்ந்து தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கைதிகள் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.