முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்து அணி வசமானது

Date:

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேலும், இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களைக் கொடுத்து, 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

அந்த அணி சார்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்போட்டி இங்கிலாந்து அணி வசமானது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...