ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர்.
சுமார் 5 மில்லியன் மக்களை பாதித்த கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தால் மெல்போர்ன் நகரம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,200 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 910 இறப்புகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.