மின்னேரியா தேசிய பூங்காவில் கடமையிலிருந்த வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கெகிராவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் சமன் வெரனியாகொடவினால் ஹபரணை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது