மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

இன்று (24) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

 

குருணாகலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...