ரணிலின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்துக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(18) கூடவுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தின் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் உறுப்புரிமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணத்தை, கட்சி அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்தவார ஆரம்பத்தில் கையளித்திருந்தது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...