ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுவது என்ன?

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசியல் நோக்கங்கள் கிடையாது. நீதிமன்றமே இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) நடைபெற்ற போது ‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்

நிறைவடைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஏன் நீதிமன்றத்தில்

முன்னிலைப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ? ‘ என்று கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சுமார் 3 நாட்கள் கடந்துள்ளன. இது சட்டரீதியான நிலைமையாகும். மாறாக பலவந்தமாக யாரையும் தடுத்து வைத்திருப்பதில்லை. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட காரணிகளுக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. இலங்கையில் சுயாதீன பொலிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிமன்றத்தினாலேயே எடுக்கப்படும் என்றார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...