வைத்தியசாலை குளியலறையில் அஸ்ரா செனகா தடுப்பூசி குப்பிகள்

Date:

அஸ்ட்ரா செனகா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், தென்னிலங்கை வைத்தியசாலையின் குளியலறையில் இருந்து வெற்று மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா – வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டம் – வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களைத் தவிர சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்றும் நடவடிக்கை இடம்பெறாததால் நேற்றைய தினம் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டம் வழங்கப்பட்டு வைத்தியசாலையில் எஞ்சியிருந்த 22 மருந்துக்குப்பிகளை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றுவதற்கு வைத்தியசாலை அதிகாரிகள் உடன்பட்டிருந்ததாக வைத்தியசாலையின் ஊழியர்கள் குழு தெரிவித்தது.
இதனிடையே, அந்தத் தடுப்பூசிகளை நேற்று அவசரமாக எடுத்துச்செல்வதற்கு சுகாதார அமைச்சு முயற்சித்துள்ளது. இதேவேளை வைத்தியசாலையின் குளியலறையில் இருந்து ஏராளமான வெற்று மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி குப்பிகளா என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
எனினும் குறித்த குப்பிகள் முதல் டோஸ் வழங்கிவிட்டு கழிவுக்காக வைக்கப்பட்டவை என்று வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளது. வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத சிலருக்கு இரகசியமாக AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்ற கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் குழு தெரிவிக்கின்றது.

இதேவேளை, காலி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் முறைகேடாக செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டமக்களுக்கு வழங்கப்படவிருந்த அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி, வேறுமாகாணங்களைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
வைத்தியர்களின் குடும்பத்தினர், அரச சேவையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு, இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருந்தது. ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு இது தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, குறித்த இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...