5 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்

Date:

இன்று(29) அதிகாலை 6 மணி முதல் நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கங்ஹிந்தசெவன தொடர்மாடி குடியிருப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தின் களனி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 ஆம் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொல்தொடுவ கிராமம், அம்பாறை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...