கொழும்புப் பகுதியில் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிய கப்பலின் கழிவு பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன.
கடந்த வாரம் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீபற்றிய நிலையில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான கழிவு பொருட்கள் என்று சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் மீன்பிடி திணைக்களத்தினர் கடற்படையினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து கடலில் கரை ஒதுங்கிய பொருட்களை சேகரித்து சென்றுள்ளனர்
வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் மற்றும் எரிந்த நிலையில் காணப்பட்ட சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறிய உருண்டைகள் கடல் கரையேரங்கள் முழுவதிலும் சிதறி கிடப்பதை அவதானிக்க கூடியதா உள்ளதுடன் தற்போது காற்று காலம் என்ற படியினால் மேலும் அதிகமான பொருட்கள் மன்னார் கடல் பகுதிகளை வந்தடைய கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.