அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலந்திவா முதலீட்டு நிறுவனம் மற்றும் செலந்திவா லெசர் முதலீட்டு நிறுவனம் என்பனவற்றுக்கு, அரச சொத்துக்களை மாற்றுவதற்கும், குத்தகைக்கு வழங்குவதற்கும் தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழில் ரீதியான பொறியியலாளர் ஒருவரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.