இந்த வருட மீலாத் விழா நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில்

Date:

இந்த ஆண்டுக்கான மீலாத் விழாவை நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் மீலாத் விழா கொண்டாடுவதற்கான தீர்மானத்தை பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

நுவரெலிய மாவட்டத்திலுள்ள 28 பள்ளிவாயல்களின் புனர்நிர்மான வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹட்டன் நகர ஜும்ஆப் பள்ளிவாயல் நினைவு முத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலிய மாவட்ட முஸ்லிம்களது வாழ்வு, வரலாறு, பாரம்பரியங்கள் பற்றிய நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

வழமையாக பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை தொழில்நுட்பத்தின் துணையுடன் online ல் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் போன்று இம்முறையும் வீடியோ ஆவணப்படப் போட்டியும் நடைபெறவுள்ளது. அத்துடன் கவியரங்கு மற்றும் வெபினார் நிகழ்வுகள், மர நடுகை, விலங்கினங்களுக்கு கருணை காட்டல், அனாதைகள் மற்றும் முதியோருக்கான நிகழ்வுகள் பள்ளிவாயல்களினூடாக நடைபெறவுள்ளன.

அதேபோன்று சிங்கள மொழியில் பத்து கஸீதாக்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

தேசிய மீலாத் தினத்தையொட்டி நுவரெலிய  மாவட்டத்தில் உள்ள பத்து முஅத்தீன்மார்கள்  மற்றும் 10 கதீப் மார்களை தெரிவுசெய்து பாராட்டி சன்மானம்  வழங்குவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்..

கொவிட் 19 நோய்ப்பரவலை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி புர்தா பாடுதல் உட்பட நுவரெலிய மாவட்டத்தை மையமாக வைத்து பல்வேறு ஆண்மீக நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...