இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று சுகாதார வழிமுறையை மீறிய குற்றம்சாட்டி லேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.