நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மேலும் ஒன்லைன் முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், வீடியோ (காணொளி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)