ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனான நியூசிலாந்து !

Date:

ஐசிசியினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் இந்தியா அணியை வீழ்த்தி நியுசிலாந்து அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹெம்ப்டனில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் தொடர்ச்சியாக மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 6 ஆவது நாளாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனை அடுத்து போட்டியின் இறுதி நாளான இன்று நியுசிலாந்து அணிக்கு 139 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...