போக்குவரத்து அபராதங்களை online ஒன்லைன் மூலமாக செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை 19 வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
(கிரெடிட் கார்டுகள்) கொடுப்பனவு அட்டை அல்லது தொலைபேசியை பயன்படுத்தி போக்குவரத்து அபராதங்களை உடனடியாக செலுத்தக்கூடிய ஒரு அமைப்பில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், அதை வழங்கிய காவல்துறை அதிகாரியின் ஸ்மார்ட் போனுக்கு ரசீது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், தபால் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையுடன் போக்குவரத்து அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பது குறித்து டி.ஐ.ஜி அஜித் ரோஹனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு முழுமையாக செயல்பட்டவுடன், இந்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை இந்த காலகட்டத்தில் விதிக்கப்படும் இத்தகைய போக்குவரத்து அபராதங்களை செலுத்த அனுமதிக்கப்படும்.
இதன் காரணமாக அமைச்சர் வீரசேகர , போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை வெளிப்படுத்தினார்.