கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் வீடுகளிலேயே உயிரிழக்க காரணம் இது தான்| உபுல் ரோஹண

Date:

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம் , தொற்று அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே இருப்பதாகும்.

இதேபோன்று தொற்று அறிகுறிகள் தீவிரமடைந்தால் அதன்போது தொற்றாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையும் வீடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகும் வீதம் அதிகரிக்க காரணமாகும்.

கொவிட் -19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களிடம் சொந்த வாகனம் இல்லாதபட்சத்தில் வேறு வாகனங்களில் செல்வதிலும் சிக்கல் காணப்படுகிறது.

அத்தோடு 1990 அம்புலன்ஸ் சேவைகளும் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளமையில் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே சாதாரண தொற்று அறிகுறிகள் தென்படும்போதே மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...