கோவிட் பரவல் ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது- ஜனாதிபதி

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்களிற்கான 5000 நிவாரணமாக 30 பில்லியனை செலவு செய்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அரசாங்கம் இந்த செலவை சுமந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக சுகாதார துறைக்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் அன்டிஜென் சோதனைகளிற்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...