சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Date:

தனது தலைநகர் டமாஸ்கசில், இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்கியதாக கூறியுள்ள சிரியா, தனது வான்தாக்குதல் தடுப்பு முறையை ஆக்டிவேட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கசின் மீது குண்டுகளை வீசியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.சிரிய ராணுவ நிலைகளின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.டமாஸ்கசின் விமான நிலையம் அருகிலும், ஹோம்ஸ் மாகாணம், ஹாமா மற்றுமத் லதாகியா மாகணங்களிலும் இந்த குண்டுகள் போடப்பட்டதாக சிரியன் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனின் காசா மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் அதிர்வுகள் முடிவதற்குகள் இஸ்ரேல் இப்போது சிராயா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிரியாவின் சில இடங்களில் இருக்கும் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஈரான் படைப்பிரிவுகளை தாக்கும் விதமாக இஸ்ரேல் இந்த போர் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...