சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் சித்திரவதை குறித்து மௌனம் காப்பது ஏன்?- இம்ரான் கான் பதில்!

Date:

சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டம் தெரிவிப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்துள்ளார்.

 

சீனாவின் ஸியான்ஜிங் (Xinjiang)பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் உய்குர் (Uyghurs) முஸ்லிம்கள் பல தடுப்பு முகாம்களில் தடுத் வைக்கப்பட்டுளளதாக நம்பப்படுவதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்கம் தெரிவித்துள்ளது தடுப்பு முகாமிலிருந்து வெளியேறிய பலர் தாம் உடல் ரீதியானதுஷ்பிரயோகங்களுக்குள்ளானதாகதெரிவித்துள்ளனர். சிலர் மலடாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர் எனசெய்திகள் வெளியாகியுள்ளன.

ஸியான்ஜிங்கில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ‘இன அழிப்பு’ என அமெரிக்காவும் மேற்குலகின் ஏனைய பல அரசாங்கங்களும் விமர்சித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் அக்ஸியோஸ் எச்.பி.ஓ. (Axios A HBO) இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் ஸ்வானுக்கு (Jonathan Swan_பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் செவ்வி அளித்தார்.

“உங்கள் எல்லைக்கு அப்பால் மேற்கு சீனாவில், ஒரு மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லிம்களை சீன அரசாங்கம் மீள்கல்வி முகாம்களில் அடைத்துள்ளது. முஸ்லிம்களை சீன அரசாங்கம் சீன அரசாங்கம் சித்திரவதை செய்துள்ளது.அவர்களை கட்டாயமாக மலடாக்கியுள்ளது ஸின்ஜியாங்கில் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிப்பதற்காக, தொழுகை நடத்துவதற்காக,

பிள்ளைகளுக்கு முஸ்லிம் பெயர்களைசூட்டுவதற்காககூட தண்டிக்கப்பட்டுள்ளனர்.பிரதமரே நீங்கள் ஏன் இஸ்லாமோபோபியா குறித்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெளிப்படையாக பேசுகிறீர்கள் ஆனால், மேற்கு சீனாவில் முஸ்லிம்கள் மீதான இன அழிப்பு குறித்து முற்றிலும் மெளமாக இருக்கிறீர்கள்?” என மேற்படி நேர்காணலில் ஊடகவியலாளர் ஜொனதன் ஸ்வான் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு இம்ரான் கான் பதிலளிக்கையில், “நாம் சீனர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்படி, இவ்வாறு நடக்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள்” என பிரதமர் இம்ரான் கான் பதிலளித்தார்.

அவ்வேளையில், ஆனால், ஆதாரங்கள் பெருமளவில் இருக்கின்றன என ஊடகவியலாளர்கள் ஜொனதன் ஸ்வான் குறிப்பிட்டார்.

பிரதமர் இம்ரான் கான் பதிலளிக்கையில், “சீனாவுடனான எந்தவொரு பிரச்சினை குறித்தும் நாம் நாம் மூடிய கதவுகளுக்குப் பின்னாலேயே பேசுகிறோம். எமது மிகக் கடினமான தருணங்களில் சீனா எமக்கு மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளது.

நாம் திண்டாடும்போது, எமது பொருளாதாரம் திண்டாடும்போது, சீனா எமது உதவிக்கு வந்தது. எனவே அவ்களை நாம் மதிக்கிறோம். எந்தவொரு பிரச்சினை குறித்தும் நாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசுகிறோம். இது ஏன்

மேற்குலகுக்கு ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ளது? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்?” என இம்ரான் கான் கூறினார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...