சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று (13) எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 138 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் என ஏராளமானோர் இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்த சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிக அளவில் இரத்தம் வெளியேறியுள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.