இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் இழந்தது இலங்கை அணி!

Date:

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (26) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் மாலன் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஸ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பினுர பெர்னாண்டோ அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், பந்துவீச்சில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும், சேம் கரன் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

அதன்படி, 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...