கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும்.
மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளது.
குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது, பின்னர் சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.